காதலுக்கு எதிர்ப்பு ; 24 வருடங்களாக தாய் மகளுக்கு செய்த நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்!!

Thursday, 14 December 2017 - 13:17

+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%3B++24+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21%21

மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை சுமார் 24 வருடங்கள் வீட்டுக்காவலில் வைத்த தாய்க்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பல வருடங்களுக்கு முன்னால் நடதேறிய சம்பவமொன்று வௌிநாட்டு ஊடங்களில் வௌியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Blanche Monnier என்ற குறித்த யுவதி சட்டத்தரணி ஒருவரை காதலித்துள்ளார்.

குறித்த காதல் திருமணத்தில் தாய் இணக்கப்படவில்லை.

எனினும் மகள் பிரிதொரு ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள இணங்கவும் இல்லை.

பிரிதொரு ஆண் மகனை திருமணம் செய்ய இணக்கம் தெரிவிக்கும் வரை தாய் தனது மகளான Blanche Monnier வீட்டிற்குள் ஒரு அறைக்குள் பூட்டி வைத்துள்ளார்.

இவ்வாறு பல வருடங்கள் கடந்த நிலையில் Blanche Monnier என்ற யுவதி மன நலம் பாதிக்கப்பட்டவளாய் தனது இலட்சியத்தினையும் மறந்து வாழ்ந்து வந்துள்ளார்.

சுமார் 24 வருடங்கள் கடந்த நிலையில்,  அறைக்குள்ளிருக்கு கதறி அழுகும் சத்தம் கேட்டுள்ளது.

இதனை செவியுற்ற அயலவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

குறித்த வீட்டிற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

எனினும் கதறல் அழுகைக்கான தடயங்கள் எதுவும் காவல் துறையினரால் கண்டறியமுடியவில்லை.

இந்நிலையில், வீட்டினை சோதனை செய்ய புலனாய்வு காவல் துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளது.

வீட்டினை சோதனையிட வருகை தந்த புலனாய்வு காவல் துறையினர் வீட்டிற்குள் இரகசிய பாதாள அறை ஒன்று இருப்பதனை கண்டறிந்துள்ளனர்.

அதற்குள் சோதனை செய்த போது யுவதி ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து யுவதியை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்..

வைத்தியசாலையில் சேர்ப்பித்த யுவதிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யுவதி உடனடியாக மன நல மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், யுவதியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தாயை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவருக்கு 15 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி , 1849ம் ஆண்டு பிறந்துள்ளதோடு தனது 63வது வயதில் 1913 இல் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.