நேற்றைய தினம் 38 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் - எங்கு தெரியுமா?

Friday, 15 December 2017 - 12:06

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+38+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F+
ஈராக் நாட்டில் கொலை குற்றங்களில் ஈடுபட்ட 38 சன்னி போராளிகளுக்கு நேற்றைய தினம் ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஈராக் நாட்டில் கொலை குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 38 சன்னி போராளிகள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் அவர்கள் தெற்கு ஈராக்கில் உள்ள நஸ்ரியா நகரின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் தீவிரவாத குற்றச்சாட்டுகளில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 38 பேரும் சிறைச்சாலையில் நேற்று தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவலை அந்நாட்டின் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 25-ந் திகதி ஒரே நாளில் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சன்னி போராளிகள் 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதன் பின் இன்று, ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.