ரஜினியின் மௌனத்தால் விஷம் அருந்திய புரூஸ்லி!! நடந்தது என்ன?

Saturday, 16 December 2017 - 9:50

%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%21%21+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி தன்னுடைய பிறந்த நாளின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ம் திகதி அரசியலுக்கு வருவது பற்றி எதுவும் அறிவிக்காததை அடுத்து சேலம் ரசிகர்மன்ற நிர்வாகி ஏழுமலை விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்தார்.

தற்போது உடல்நலம் சற்று தேறி இருக்கிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏழுமலையிடம் பேசிய போது, ''என் பேரு ஏழுமலை என்கின்ற ரஜினி புரூஸ்லி, என் மனைவி பெயர் மகேஸ்வரி எங்களுக்கு திவ்யா, வசிகரன் என்ற ரெண்டு குழந்தைகள் இருக்கிறாங்க. நாங்க சேலம் அழகாபுரம் பகுதியில் குடியிருக்கிறோம். எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ரஜினியை பிடிக்கும். ரஜினின்னா எனக்கு உயிர். நான் கட்டிட வேலைக்கு போயிட்டு இருக்கிறேன். வேலைக்கு போகும் போது ஒவ்வொரு நாளும் என் தலைவர் ரஜினியை தொட்டு முத்தமிட்டு ஒரு சல்யூட் அடிச்சுட்டு தான் போவேன்.

1983-ல் ரசிகர்மன்றம் ஆரம்பித்ததில் இருந்து நான் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருக்கிறேன். படிப்படியாக உயர்ந்து தற்போது சேலம் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைமை கழக ஆலோசகராகவும், அழகாபுரம் பகுதி கழகச் செயலாளராகவும் இருக்கிறேன். ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ம் திகதி வழக்கத்தை விட இந்த வருடம் பிறந்த நாளில் அரசியலுக்கு வருவது பற்றி அறிவிப்பதாக சொல்லி இருந்ததால் மிகுந்த உற்சாகத்தில் இருந்தேன்.

காலையிலேயே நீராடி விட்டு புத்தாடை அணிந்து கொண்டு என் தலைவர் ரஜினிக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு வீட்டில் சமைத்து வைத்திருந்த சிறப்பு உணவுகளை சாப்பிட்டு விட்டு மதியம் ராஜகணபதி கோவிலுக்கு போய் ரஜினி பெயரில் அர்ச்சனை செய்து வீராணம், சீலநாயக்கன்பட்டி அன்பு இல்லத்தில் அநாதை குழந்தைகளுக்கு அன்னதானம் கொடுத்து விட்டு மாலை வரை ரஜினியின் அறிவிப்புக்காக காத்திருந்தேன்.

மாலை 6 மணி ஆகியும் எந்த அறிவிப்பும் வராததால் நேராக உரக்கடைக்கு சென்று பால்டாயில் வாங்கிக் வந்து இரவு 8 மணிக்கு எங்க வீட்டிக்கு பின்னாடி உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்று கட, கடன்னு குடித்து விட்டு கடைசியாக மனைவியும், குழந்தைகளையும் பார்க்கலாம் என்ற ஆசையில் வீட்டுக்கு வந்தேன். வீட்டிற்கு வந்ததும் மயக்கம் வந்து வாயில் நுரை தள்ளியதும் என்னை அரசு மருத்துவமனைக்கு தூக்கிட்டு வந்து விட்டார்கள்.

என்னோட ஆசையெல்லம் எப்படி ரஜினி சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்சியாக வைத்திருந்தாரோ அதே போல அரசியலுக்கு வந்து பொதுமக்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே என்னுடைய ஆசை'' என்றார்.