சிலியின் புதிய ஜனாதிபதியாக செபஸ்டியன் பினரா தெரிவு

Monday, 18 December 2017 - 8:58

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
சிலியின் புதிய ஜனாதிபதியாக செபஸ்டியன் பினரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதியான இவர் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
 
இவரது எதிர்தரப்பு போட்டியாளரான அலெஜான்ட்ரோ குய்லியர் , முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினராவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
95 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் பினரா 54 சதவீதமான வாக்குகளை பெற்றுள்ளார்.
 
இந்தமுறை சிலியில் சுமார் 14 மில்லியன் பேர் வாக்களித்துள்ளனர்.
 
வெளிநாட்டில் வாழும் சிலி நாட்டவர்களும் இந்த முறை முதன் முறையாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.