புசல்லாவையில் அதிசயம்..!200 ஆண்டுகளாக நாகலிங்கத்தை பாதுகாத்த நாகம்!! குகைக்குள் மாணிக்கம்!

Monday, 18 December 2017 - 13:01

+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21200+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21%21++%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21
புசல்லாவை டெல்ட்டா தோட்ட பகுதியில் நாகலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நாகலிங்கம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திரும்பாவை முன்னிட்டு டிசம்பர் மாதம் அதாவது மார்கழி மாதம் 16 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் அதாவது தைமாதம் 14 ஆம் திகதி இராமர் பஜனை பாடுவது வழக்கமாகும்.

இந்நிலையில் கம்பம் பாலிக்கும் நிகழ்வின் போது மனதில் நினைப்பதை இறை அருள் கூடியவர்கள் காணப்பிக்கவேண்டும்.

இதன்போது அருளாடிய ஒருவர் காட்டிற்கு சென்று குறித்த நாகலிங்கத்தை காண்பித்துள்ளார்.

குறித்த நாகலிங்கம் சுமார் 200 இற்கும் அதிகமான வருடங்கள் பழமை வாய்ந்தவை என தெரிவிக்கப்படுகின்றது.

தோட்டத்தின் பஜனை ஆசிரியர் அ.பெரியசாமி தலைமையில் பிரதேச இராமர் ஆலயத்தில் நடைபெற்ற போது, ஆருடன் கொண்ட எஸ்.ரசிண்டன் என்பவரினால் இரவு வேளையில் தான் ஒரு அதிசயத்தை காட்டவுள்ளதாக கூறி ஆலயத்தின் அருகில் இருக்கும் பாரிய பாலத்திற்கு கீழ் சென்று குறித்த சிவநாகலிங்கத்தை மீட்டெடுத்து வந்துள்ளார்.

இந்த சிலை 05 தலை நாகபாம்பு சிவபெருமானுக்கு குடைபிடிக்கும் தோற்றத்தில் காணப்படுகின்றது.

சிலை காணப்பட்ட இடத்தில் பலமை வாய்ந்த நாகபாம்பு ஒன்றும் தற்போது குடிகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பாம்பு இருக்கும் குகைக்குள் மாணிக்க கற்கள் இருப்பது போன்ற ஒளியும் காணப்படுவதாக குறித்த தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை பார்வையிடுவதற்காகவும் சிலையை (நாகலிங்கம்) பார்வையிடுவதற்காகவும் வணங்குவதற்காகவும் பெருந்திரலான மக்கள் இப் பிரதேசத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

குறித்த பிரதேசத்தில் 200 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெருந் தோட்டங்களில் தொழில் செய்ய இந்தியாவிலிருந்து வந்தவர்களினால் இந்த இடத்தில் சிவனை (நாகலிங்கம்) வைத்து வணங்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.