Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+100%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21
Friday, 12 January 2018 - 9:22
இன்று தனது 100வது செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்தும் இந்தியா!
14

Shares
1,732

Views
இஸ்ரோ நிறுவனம் இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளை இன்று ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இருக்கிறது.

இதன்போது, 30 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளது.

அதில் 6 நாடுகளைச் சேர்ந்த 28 சொயற்கைக்கோள்களும் அடங்கும்.

இந்த செயற்கைக்கோள்கள் இன்று காலை சரியாக 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த 30 செயற்கைகோள்களின் மொத்த எடை 1,323 கிலோகிராம் ஆகும்.

இதில் இந்தியாவைச் சேர்ந்த கார்டோசாட் 2 சீரிஸ் என்ற 710 கிலோ கிராம் எடையுடன், பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயற்கை கோளும், 5 கிலோ கிராம் எடையுள்ள நானோ செயற்கை கோளும் அடங்கும்.

இந்த செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி - 40 ராக்கெட்டில் செலுத்தப்படுகிறது.

இதில் கனடா, அமெரிக்கா, ஃபின்லாந்து, பிரான்ஸ், சௌத் கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 நானோ செயற்கை கோள்களும், 3 மைக்ரோ செயற்கை கோள்களும் சேர்ந்து விண்ணில் ஏவப்பட இருக்கின்றன.

இதுகுறித்து இஸ்ரோ நிறுவனத்தின் இயக்குநர் அண்ணாத்துரை தெரிவித்ததாவது,

கார்டோசாட் செயற்கைகோளானது பூமியைப் பற்றிய துள்ளியமான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் ஆற்றலை உடையது.

இந்தியாவின் 100-வது செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் அந்த நொடிக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றார்
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
338 Views
10,131 Views
22 Views
1,075 Views
210 Views
11,718 Views
Top