Friday, 12 January 2018 - 20:22
இலங்கை சின்மயா மிஷனின் அனுசரணையுடன் கொழும்பில் ஆன்மீக சொற்பொழிவு
இலங்கை சின்மயா மிஷனின் அனுசரணையுடன் சர்வதேச சின்மயா மிஷனின் தலைவர் சுவாமி சுவரூபானந்தஜியினால் நேற்று முதல் கொழும்பில் ஆன்மீக சொற்பொழிவுகள் இடம்பெறுகின்றன.
எதிர்வரும் 14ஆம் திகதி பொங்கல் தினம் வரை நடைபெறும் இந்த சொற்பொழிவு நிகழ்வுகளில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ரன்ஜித் சிங்ஹா சந்து பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்த ஆன்மீக சொற்பொழிவுகள் தினமும் மாலை 6.30 மணி முதல் 8.00 மணிவரை, கொழும்பு தும்முல்ல சந்தியில் உள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாளிகையில் இடம்பெறும் என இலங்கை சின்மயா மிஷனினின் சிரேஷ்ட உறுப்பினர் எம். சித்திரகுமார் தெரிவித்துள்ளார்.