Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
Friday, 12 January 2018 - 20:29
துனிசியாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்: நூற்றுக்கணக்காணோர் கைது
101

Views
துனிசியா அரசாங்கத்திற்கு எதிராக கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இதுவரையில் 328 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துனிசிய நிதி சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

புதிய நிதி சட்டத்தின் அடிப்படையில் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதுடன், பெறுமதிசேர் வரியும் ஜனவரி மாதம் முதல் அதிகரித்துள்ளன.

தலைநகரில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் தற்போது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருகின்றன.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பின்னர் வன்செயலாக மாறியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது ஒருவர் பலியாகியுள்ளதாக உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தவிர, 21 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், ஏராளமான காவல்துறை வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை கூடம் ஒன்று பெட்ரோல் குண்டு தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ள அமைச்சு, அதனை அரசாங்கம் கடுமையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் வன்செயலில் ஈடுபட்டவர்கள் அல்லது பொது சொத்துக்களை சூறையாடியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
338 Views
10,131 Views
22 Views
1,075 Views
210 Views
11,718 Views
Top