Saturday, 13 January 2018 - 6:42
நேற்று இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் பலி
சிலாபம் - குருநாகல் வீதியில் ஹெட்டிபொல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உந்துருளி செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் ஹிரிகொல்ல – கொபேய்கனே பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகலில் இருந்து சிலாபம் திசை நோக்கி பயணித்த கெப் வண்டியின் பின்னால் உந்துருளி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த இருவரும் காயமடைந்து ஹெட்டிபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உந்துருளி செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.
உந்துருளியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் ஹெட்டிபொல காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.