Hirunews Logo
%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
Saturday, 13 January 2018 - 7:40
யாழ் பல்கலை மாணவர்கள் மோதல்:தவறிழைத்த மாணவர்களுக்கு சிக்கல்
1

Shares
157

Views
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைகழக கலைபீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களிடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது.

அந்த சம்பவம் தொடர்பில் அவரிடம் எமது யாழ்ப்பாண செய்தி தொடர்பாளர் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மோதல் சம்பவத்தையடுத்து யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இருந்து கலைப்பீடத்தின் நுன்கலை மற்றும் சட்ட பீடங்களை தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த 3ஆம், 4ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிக நுழைவுத்தடை விதிக்கப்பட்டது.

அத்துடன், அவர்கள் விடுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக துனைவேந்தர், மாணவ ஆலோசகர்கள், ஒழுக்காற்றுத்துறையினர் கூடி ஆராய்ந்தனர்.

அதன் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த பிரச்சனை தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என யாழ்ப்பாண பல்கலைகழக பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை கல்வி நெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2007ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் நுண்ணறிவுப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ரஜரட்டை பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை www.vau.jfn.ac.lk என்ற இணையத்தளத்தினூடாகவும் பார்வையிடமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
338 Views
10,131 Views
22 Views
1,075 Views
210 Views
11,718 Views
Top