செய்தியாளர்களின் கேள்விக்கு கோபமடைந்த விராட் கோஹ்லி (காணொளி)

Thursday, 18 January 2018 - 16:30

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
தென்னாபிரிக்கா அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி நேற்று தோல்வியை தழுவியிருந்தது.

அதன்படி , மூன்று போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் , நேற்றைய போட்டியின் பின்னர் , இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி செய்தியாளர்களை சந்தித்தார்.

இதன்போது , செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கோபமடைந்த விராட் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

கேள்வி : இந்தியாவில் தோல்விகளை தவிர்த்துக்கொள்ளும் இந்திய அணி, அணியின் வீரர்களை மாற்றியதால் பயன்களை அடைந்துள்ளதா?

பதில் : விழிகளை உருட்டிப்பார்த்த கொஹ்லி கோபத்துடன் ' இங்கே பாருங்கள் நான் உங்களுடன் சண்டை பிடிக்க வரவில்லை, கேள்விகளுக்கு பதிலளிக்கவே வந்துள்ளேன், இந்தியாவிலோ அல்லது பிறநாடுகளிலோ வெற்றிப்பெறுவதே அவசியம், இதுவரை 21 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளோம் அதனை சிந்தித்து பார்க்க வேண்டியதும் கட்டாயமாகும்.
இந்தியாவில் வைத்து தென்னாப்பிக்க அணி பல தடவைகள் வெற்றிக்கொண்டுள்ளது. அல்லது வெற்றியின் விளிம்பிற்கு சென்று தோல்வியை தழுவிக்கொண்டும் உள்ளது. இது எவருக்கேனும் தெரியுமா என வினவி செய்தியாளர்களை பார்வையிட்டார் கோஹ்லி.

இந்நிலையில் குறுக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர் இந்திய மைதானங்களின் ஆடுகள தன்மையினால் அவர்கள் வெற்றிப்பெறவில்லை என பதிலளித்துக்கொண்டிருக்கையில், கோபமடைந்த கொஹ்லி,

மைதானத்தின் தன்மைக்குறித்து முறைப்பாடு செய்வது எமது நோக்கமல்ல, கேப்டவுனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி மூன்று நாட்களிலேயே நிறைடைந்தது. அதற்கு என்ன செய்ய முடியும், நாம் வெற்றிப்பெறுவதற்கே வந்தோம். புரிந்துக்கொள்ளுங்கள்.

அனைவருக்கும் நான் ஒன்று கூறவிரும்புகின்றேன் தவறு எங்கு நடந்துள்ளதென்று நாங்கள் கண்டறிந்துள்ளோம். அதனை சீர் செய்து மீண்டும் வெற்றியை நோக்கி அணியை நகர்த்துவேன் என குறிப்பிட்டார்.