இலங்கை அணிக்கான 3 வது போட்டி நாளை

Saturday, 20 January 2018 - 13:23

+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+3+%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+
பங்களாதேஷ் அணியுடனான முக்கோண ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணிக்கான 3 வது போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

சிம்பாபே அணியுடன் நாளைய தினம் இலங்கை அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளைய தினத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தால் இறுதி போட்டியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் இழக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை,   இறுதி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்துவதே தமது இலக்கு என தென்னாப்பிரிக்க கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா தெரிவித்துள்ளார்.
 
இரு அணிகளுக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
 
இருஅணிகளுக்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற 2 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
 
இந்த நிலையிலேயே, அவர் அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன், எவ்வாறு விளையாட வேண்டும் என்பது தமது அணி அறித்துள்ளது.
 
அதேவேளை, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சின் மீதும் தாம் மரியாதை வைத்துள்ளதாகவும் காஜிசோ ரபடா குறிப்பிட்டுள்ளார்.