பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை

Saturday, 20 January 2018 - 20:16

+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அரச பேருந்துக் கட்டண உயர்வை மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணங்களை அதிகரிக்க தமிழக அரசாங்கம் நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது.

6 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தக் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட நகர, மாநகர பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாவாகவும், அதிகபட்ச கட்டணம் 12 ரூபாவாகவும் இருந்தது.

இந்த நிலையில், குறித்த பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாவாகவும், அதிகபட்ச கட்டணம் 19 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய அரச பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி என்பன வலியுத்தியுள்ளன.

பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது ஏழை நடுத்தர மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஈவிரக்கமற்ற கொடுஞ்செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மக்களுக்கு எதிரான இந்தப் பேருந்து கட்டண உயர்வினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துவதாக சீமான் கூறியுள்ளார்.