மைதானத்தை தலைகீழாக மாற்றி புதிய சாதனை படைந்த இலங்கை அணியின் இளம் வீரர்!! (காணொளி)

Tuesday, 23 January 2018 - 13:58

%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
நியூஸிலாந்தில் இடம்பெற்றுவரும் 19 வயதுக்குற்பட்டோருக்கான இளையோர் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் வீரர் ஹசித பொயாகொட புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

இன்று இடம்பெற்ற 9வது இடத்துக்கான காலிறுதிப்போட்டியில் இலங்கை அணி, கென்யாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கட்டுகளை இழந்து 419 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கென்யா அணி 108 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 311 ஓட்டங்களால் படுதோல்வியை தழுவியது.

இதில் இலங்கை அணிசார்பில் அதிரடியாக ஆடிய பொயாகொட 152 பந்துகளில் 191 ஓட்டங்களை குவித்து சாதனைப்படைத்துள்ளது.

இந்த ஓட்ட எண்ணிக்கையானது 19 வயதுக்குற்பட்டோர் ஒருநாள் போட்டிகளில் தனியொரு வீரர் பெற்றுக்கொண்ட அதிக ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 17ம் திகதி கென்யா அணிக்கெதிராக நடைபெற்ற 19 வயதுக்குற்பட்ட உலகக்கிண்ண போட்டியில் நியூஸிலாந்து அணியின் பஹுலா 180 ஓட்டங்களை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

தற்போது இந்த சாதனையை பொயாகொட முறியடித்துள்ளார்.

இதேவேளை இந்த போட்டியில் மற்றுமொரு சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இலங்கை அணி பெற்றுக்கொண்ட 419 ஓட்டங்கள், 19 வயதுக்குற்பட்டோருக்கான ஒருநாள் போட்டிகளில் பெற்றுக்கொண்ட நான்காவது மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.


rn


rn