இன்றைய போட்டியின் முடிவுக்கு அமைய இலங்கை அணிக்கு நேர்ந்துள்ள கதி

Tuesday, 23 January 2018 - 18:57

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+
பங்களாதேஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

பங்களாதேஸில் நடைபெறும் மும்முனை ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரில், பங்களாதேஸ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில், பங்களாதேஸ் அணி வெற்றிப் பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி பங்களாதேஸ் 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றது.

தமிம் இக்பால் 76 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன், அவர் ஒருநாள் போட்டிகளில் 6000ம் ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.

பங்களாதேஸ் அணி சார்பாக 6000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெறுமையையும் அவர் பெற்றுள்ளார்.

217 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய சிம்பாப்வே அணி, 36.3 ஓவர்களில் 125 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற நிலையில் பங்களாதேஸ் அணி முக்கோண தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனிடையே எதிர்வரும் வியாழக்கிழமை பங்களாதேஸ் அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் பங்களாதேஸூடன் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தால் இறுதிப்போட்டிக்காக இணையும் அணி தொடர்பில், இலங்கை மற்றும் சிம்பப்வே அணிகள் பெற்றுள்ள சராசரி புள்ளிக்கமைய தெரிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.