Hirunews Logo
%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
Tuesday, 13 February 2018 - 14:36
ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை அமைக்க தீர்மானம்!
222

Shares
26,659

Views
ஐக்கிய தேசிய கட்சியின் தனி அரசாங்கம் அமைப்பதற்கு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் , பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியில் மற்றும் கட்சித்தலைமைப்பதவியில் இருந்து விலகுமாறு தற்போதைய நிலையில் கடுமையாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சந்தித்த படுதோல்வியை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சித்தலைமையில் இருந்து விலகி கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை நண்பர்களுடன் இணைந்து அவர்களின் ஆலோசனைக்கமைய செயற்பட்டமையும், நண்பர்களுக்கு அரசாங்கத்தில் பல பதவிகளை பெற்றுக்கொடுத்தமை ஆகிய நடவடிக்கைகளினாலேயே ஐக்கிய தேசிய கட்சி பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொருளாதார துறையில் அனைத்து முதல் நிலை பதவிகளையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நண்பர்கள் வசமே காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, பிரதமரின் வர்த்தக ஆலோசகர் சரித்த ரத்வத்தையின் சிந்தனைக்கமைய, ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பிரதான பதவியை அவரின் சகோதரரான சுரேன் ரத்வத்தையை நியமித்தமையால் இடம்பெற்ற மோசடிகளை தொடர்ந்து அரசாங்கத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் தலைவர் ரணில்விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ள வேண்டுமாயின் பிரதமர் கட்சி தலைமைத்துவத்திலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் அலரிமாளிகையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் மாறாக பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் 16 பேருக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று முற்பகல் அலரிமாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கலந்துரையாடல் நிறைபெற்றதன் பின்னர் வெளியேறிய போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மயந்த திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி தனி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் அதற்கான கருத்துக்களே முன்வைக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார குறிப்பிட்டார்.

இந்நிலையில், பிரதமர் யார் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா என கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த நளின் பண்டார தனியார் தொலைக்காட்சி ஒன்றினை பெயரினை குறிப்பிட்டு அங்கு சென்றே தீர்மானிக்கவேண்டும் எனவும் கேலிக்கையாக பதிலளித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,302 Views
15,272 Views
605 Views
2,904 Views
286 Views
16,706 Views
Top