Hirunews Logo
%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%2C+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
Tuesday, 13 February 2018 - 18:40
அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையில் தொலைப்பேசி உரையாடல்
8

Shares
985

Views
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு இடையில் தொலைப்பேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தொலைபேசி உரையாடல் நேற்று இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் விவகாரம் தொடர்பில் சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில், செயலாற்றும் நேரம் இதுவாகும் என இந்தக் கலந்துரையாடலின்போது புட்டினிடம் ட்ரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னதாக பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அபாஸ்ஸுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மொஸ்கோவில் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியின நிலைப்பாட்டை தாம் அறிய வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலமை அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ரஷ்யாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், பலஸ்தீன் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், புட்டினை சந்தித்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,302 Views
15,272 Views
605 Views
2,904 Views
286 Views
16,706 Views
Top