Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Tuesday, 13 February 2018 - 19:23
ஜனாதிபதியும், பிரதமரும் முக்கிய கலந்துரையாடலில்
659

Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுவினருக்கும் இடையில் தற்போது பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுவரும் இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியினர் தனி அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தேர்தல் பெறுபேறுகள் வெளியானதை தொடர்ந்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நேற்றிரவு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமக்கு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதால், அதற்கு முன்னதாக முடிவொன்றை எடுக்குமாறு பிரதமரிடம் கோரியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு புதிய பிரதமர் ஒருவரை நியமித்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பதவிக்காக சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயரும் முன்மொழியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு அமைய தமது கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ளப் போவதில்லையென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

தமது கட்சியின் தீர்மானங்களுக்கு அமையவே அத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தமது நிலைப்பாட்டை இதன்போது ஜனாதிபதியிடம் பிரதமர் வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை துறக்காவிட்டால், மீண்டும் ஒரு தேர்தலை நடத்துவதே சிறந்த முடிவாக அமையும் என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மூன்று கட்டங்களாக சந்திப்புக்களை நடத்தி வருகின்றார்.

கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இன்று முற்பகல் சந்திப்பை நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதாக சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,046 Views
HiruNews
HiruNews
HiruNews
703 Views
HiruNews
HiruNews
HiruNews
5,984 Views
HiruNews
HiruNews
HiruNews
13,544 Views
HiruNews
HiruNews
HiruNews
156 Views
HiruNews
HiruNews
HiruNews
41,696 Views
Top