'வர்த்தக கொள்கை மற்றும் வர்த்தக உலகலாவிய அனுபவம்' - முக்கிய கலந்துரையாடல்

Sunday, 18 February 2018 - 19:57

%27%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%27+-+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
'வர்த்தக கொள்கை மற்றும் வர்த்தக உலகலாவிய அனுபவம்' என்ற தலைப்பின் கீழ் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
இந்த கலந்துரையாடல் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கேட்போர் கூடத்தில் பேராசிரியர் ரோபாட் லோரன்சின் தலைமையின் கீழ் இடம்பெற்றது.
 
வர்த்தக நடவடிக்கைகளின் போது சிறந்த இலாபகரமான தன்மையை பெறுவது குறித்து விரிவான விளக்கத்தினை அவர் வழங்கியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
அத்துடன் இலங்கையில் உள்ள பல உயர்மட்ட வர்த்தக சமூகத்தவர்களுக்கு பயனள்ள பல கருத்துக்களையும் அவர் வழங்கியுள்ளார்.
 
இந்த கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் இந்திரா மல்வத்த உட்பட பல உயர் மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.