எந்த நேரத்திலும் பிரதமரின் பதவி பறிபோகலாம் - ஜீ.எல்.பீரிஸ்

Monday, 19 February 2018 - 9:46

%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AF%80.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D
பிரதமரை எந்த நேரத்திலும் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.

கெட்டம்பே விகாராதிபதியை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு எந்த நேரத்திலும் அமைச்சரவையை கலைப்பதற்கான அதிகாரம் உள்ளது.

அமைச்சரவையை கலைக்கின்றபோது பிரதமரும் தானாகவே அதிகாரங்களை இழக்கின்றார்.

சில வேளைகளில் ஜனாதிபதி சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்ககொள்ள முடியும்.

எனினும், கடந்த காலங்களில் சட்டமா அதிபரால் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் தவறானதாக அமைந்துள்ளதாக ஜி எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.