கருணாநிதி மற்றும் ரஜினிகாந்தை சந்தித்த கமல்ஹாசன்

Monday, 19 February 2018 - 9:51

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் நேற்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதியை சந்தித்துள்ளார்.

கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசியல் பயணத்துக்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றதாக கூறினார்.

இதேவேளை, தமது கொள்கையை திராவிட முன்னேற்ற கழகம் புரிந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து சிந்திக்கலாம் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் நேற்றைய தினம் நடிகர் ரஜினி காந்தையும் சந்தித்து கலந்துரையாடியதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ரஜினியுடனான அந்த சந்திப்பு நட்பு ரீதியானது எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.