சிறுமி ஹாசினி கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

Monday, 19 February 2018 - 16:12

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

update 5.33 pm----------------------

போரூர் சிறுமி, ஹாசினி கொலை வழக்கில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம், குற்றவாளி தஷ்வந்தை குற்றவாளி என உறுதி செய்தது. 

போரூர் அடுத்த மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர், பாபு. அவரது மகள், ஹாசினி, 6. இந்த சிறுமியை, 2017 பெப்ரவரி 5 ஆம் திகதி, அதே பகுதியைச் சேர்ந்த, தஷ்வந்த், 24, என்பவன், பாலியல் சித்ரவதை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றான்.

மாங்காடு போலீசாரால் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், பிணையில் வெளியே வந்தான். பின், அவன் தாய், சரளாவையும் கொலை செய்து, நகைகளுடன் மும்பைக்கு தப்பினான்.

தனிப்படை போலீசார், அவனை கைது செய்தபோது, போலீசாரின் பிடியில் இருந்து தப்பினான். அவனை, மீண்டும் போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.சிறுமி ஹாசினி கொலை வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்த வழக்கில், வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால், தஷ்வந்தே வாதாடினான். இந்நிலையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக தஷ்வந்த் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். நீதிமன்றி வளாகத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணை அதிகாரிகள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இன்று பகல் 3 மணியளவில் நீதிபதி வேல்முருகன், தஷ்வந்தை குற்றவாளி என உறுதி செய்து, தண்டனை விபரத்தை பின்னர் அறிவிப்பதாக தெரிவித்தார்.

தாய் சரளாவை தஷ்வந்த் கொலை செய்த வழக்கில் இன்னும் ஓரிரு நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.