இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்றுள்ள பாரிய வங்கி கொள்ளை

Tuesday, 20 February 2018 - 12:40

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88
இந்தியாவின் புதுடெல்லியில் பாரிய வங்கி கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வங்கி ஒன்றில் இணையத்தளத்தினை முடக்கம் செய்து இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளது.

குறித்த வங்கியின் அன்றாட பணிகள் கடந்த 6ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

பின்னரே இது இணை முடக்கர்களால் மேற்கொள்ளப்பட்ட சதி என தெரிவந்துள்ளது.

இதன்மூலம் சுமார் 2 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பணம் திருடப்பட்டுள்ளதுடன், இறுதியாக 5 லட்சம் டொலர் பரிமாற்றத்தை வங்கி நிர்வாகத்தினரால் தடுக்க முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையிடப்பட்ட பணத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இதேபோல், பங்களாதேஸ் மத்திய வங்கியின் இணையத்தள வலையமைப்புக்குள் நுழைந்து 81 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.