நெத்தலி கருவாடு உற்பத்தி அதிகரிப்பு

Tuesday, 20 February 2018 - 12:43

%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியான காலநிலை நீடிப்பபதையடுத்து நெத்தலி கருவாடு உற்பத்தியில் பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காலநிலை காரணமாக தினமும் அதிகளவிலான நெத்தலி மீன்கள் பிடிக்கப்படுவதால், அவற்றை கருவாடாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளில் உள்ளுர் வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாவலடி, வாகரை, எத்துக்கால, பூநொச்சிமுனை, களுவாதளை உட்பட பல கரையோர பிரதேசங்களில் குறித்த நெத்தலி கருவாடு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

ஒரு கிலோ நெத்திலி கருவாட்டை 750 ரூபாவிற்கு தொகை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.