முன்னாள் கிரிக்கட் வீரரின் மகன் தூக்கிட்டு தற்கொலை

Tuesday, 20 February 2018 - 18:17

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் அமீர் ஹனிப்பின் மகனான மெஹமட் ஸரிப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கட் அணியில் தம்மை தெரிவு செய்யாமை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் 1990 ஆம் ஆண்டு விளையாடிய அந்த அணியின் முன்னாள் வீரர் அமீர் ஹனிப், தனது மகனுக்கு வயது அதிகம் எனக் கூறியே 19 வயதிற்கு உட்பட்ட அணியில் அவரது பெயர் இணைக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

இதனால் தனது மகன் கடும் மன உளைச்சலில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானில் இடம்பெற்ற 19 வயதிற்கு உட்பட்ட அணியில் அவர் விளையாடியுள்ளார்.

பின்னர் அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் அணியில் இணைத்து கொள்ளப்படுவதாக வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.

பின்னர் அவரது வயது அதிகம் என கூறி அவரை அணியில் இணைத்துக் கொள்ள மறுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னரே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பயிற்சியாளர் மற்றும் சில அதிகாரிகளே தனது மகனின் தற்கொலைக்கு காரணம் என அமீர் ஹனிப் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன்போன்ற சம்பவம் எதிர்காலத்தில் இடம்பெற கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




rnrnrnrnrn rnrnrnrnrnrnrnrnrn