லெபனான் அமைதிகாக்கும் பணியில் இலங்கை படையினர்..

Wednesday, 21 February 2018 - 15:13

%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D..
லெபனானில் அமைதிகாக்கும் பணியில் இலங்கை படையினரை ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரது உதவி பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனை தெரிவித்துள்ளார்.
 
இலங்கை படையினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
லெபனானில் ஈடுபடுத்தப்படவிருந்த இலங்கை படையினரின் பின்புலம் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெறுவதாகவும், அதற்கு இலங்கையில் நிரந்தர வதிவிட அலுவலகம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.