வெடிப்பு சம்பவம் தொடர்பில் பிரதமரின் கருத்து

Wednesday, 21 February 2018 - 14:43

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
பண்டாரவளை தியத்தலாவ கஹகொல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ்குணவர்தனவின் கோரிக்கைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் பதில் வழங்கினர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் முதல் கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதோடு, கைகுண்டு ஒன்றே வெடித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த பயணி ஒருவரின் பயணப்பெதியிலிருந்த கைக்குண்டே வெடித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில், அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் முதல் கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.
 
இந்த சம்பவத்தில் சுமார் 19 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.