கொழும்பு – திருகோணமலை தொடரூந்து சாரதிகளின் ஆர்ப்பட்டம் நிறைவு

Wednesday, 21 February 2018 - 17:04

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E2%80%93+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+
கொழும்பு மற்றும் திருகோணமலையில் இருந்து ஆரம்பமாகும் தொடரூந்து சேவையில் இருந்து விலகி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அஞ்சல் தொடரூந்து மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு குறித்த தொடரூந்து முன் பாய்ந்து யுவதியொருவர் தற்கொலை செய்து கொண்ட பின்னர், கோபமடைந்த அவரது உறவினர்கள், தொடரூந்து மிது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை - பாலையூற்று பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தொடரூந்தின் இயந்திரத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.