நூற்றுக்கும் அதிகமான மாணவிகளை காணவில்லை

Thursday, 22 February 2018 - 9:31

%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
நைஜீரியாவின் பாடசாலை ஒன்றில் போகோ ஹராம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நைஜீரிய காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த திங்கட் கிழமை பாடசாலை ஒன்றுக்குள் உள்நுழைந்து போகோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.
 
அதன்போது பல மாணவர்களும் பணியாளர்களும் தப்பிசென்றுள்ளனர்.
 
எனினும் சுமார் நுற்றுக்கும் அதிகமான மாணவிகளை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
முன்னதாக மாணவிகள் தப்பியிருக்கலாம் என நம்பப்பட்ட போதிலும் பின்னரே அவர்கள் கடத்திப்பட்டிருப்பது தெரியவந்துள்ளர்.
 
சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் போகோ ஹராம் தீவிரவாதிகள் சுமார் 270 பாடசாலை மாணவிகளை கடத்திச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.