உருளைக்கிழங்குக்கான தீர்வை நேற்று நள்ளிரவுடன் அதிகரிப்பு

Saturday, 24 February 2018 - 8:44

%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோவொன்றுக்கான தீர்வை நேற்று நள்ளிரவு முதல் 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு ரூபாவாக இருந்த குறித்த இறக்குமதி தீர்வையானது 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 30 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தீர்வை அதிகரிப்பானது, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.