Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+6+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Monday, 12 March 2018 - 23:52
இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி
1,217

Views
சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற 4வது போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

போட்டி மழை காரணமாக தாமதமாக ஆரம்பமான நிலையில் போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 152 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

உபுல் தரங்க 22 ஓட்டங்களையும் , தசுன் சானக 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் , Shardul Thakur நான்கு விக்கட்டுக்களையும் மற்றும் Washington Sundar இரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் , மனிஷ் பாண்டே 42 ஓட்டங்களையும் , தினேஸ் கார்த்திக் 39 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் அகில தனஞ்ச இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி , இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ள இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
153 Views
19,025 Views
1,636 Views
704 Views
2,956 Views
20,751 Views
Top