Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
Tuesday, 13 March 2018 - 9:32
முக்கோண தொடரில் இலங்கை அணிக்கு பெரும் சிக்கல்
5,540

Views
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண முக்கோண தொடரில் இக்கட்டான நிலையில் இலங்கை அணி உள்ளது.

நேற்று இடம்பெற்ற தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சில் வென்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய போட்டி தாமதமாகவே ஆரம்பமானதுடன், போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்த இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இதனுடன், பங்களாதேஸ் அணிக்கு எதிராக தொடரின் மூன்றாவது போட்டியில் விளையாடிய இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி கண்டது.

இந்த போட்டியில் இலங்கை அணி அபாரமாக துடுப்பாடி 214 ஓட்டங்களை பெற்றது.

எனினும் பதிலுக்கு அதிரடியாக துடுப்பாடிய பங்களாதேஸ் அணி அந்த போட்டியில் வெற்றி கொண்டது.

இந்நிலையில் இந்த தொடரில் ஒரு போட்டியில் வெற்றிபெற்று, இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டுள்ள இலங்கை அணிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஸ் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள போட்டி மிக முக்கியமாகும்.

இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடையுமாயின் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணியும் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,826 Views
HiruNews
HiruNews
HiruNews
10,227 Views
HiruNews
HiruNews
HiruNews
8,925 Views
HiruNews
HiruNews
HiruNews
23,334 Views
HiruNews
HiruNews
HiruNews
1,422 Views
HiruNews
HiruNews
HiruNews
56,416 Views
Top