Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88..%21++%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%21
Tuesday, 13 March 2018 - 16:18
வட மாகாண சபையில் பசுபதிப்பிள்ளை கூறிய கதை..! சிரிப்பொலியில் அதிர்ந்த சபை!
1,087

Views
வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரனுக்காக கூறிய கதை ஒன்றினால் சபையில் சிரிப்பொலி மேலெழுந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பசுபதிப்பிள்ளை கூறிய கதையினால் கல்வி அமைச்சருக்கு சொல் புத்தி, சுயபுத்தி இல்லையா? என்ற கேள்வியும் மேலெழுந்தது.

வடமாகாணசபையின் 118வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போதே சு.பசுபதிப்பிள்ளை மேற்படி கதையை கூறினார்.

"அந்த கதை இப்படி அமைந்தது. ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தானாம். அந்த மன்னனுக்கு ஒரு மகள் இருந்தாளாம். அந்த மகளுக்கு மன்னன் மணமகன் தேடினான்.

அப்போது மன்னன் தன் அமைச்சர்களை அழைத்து 100 அறிவுள்ள மணமகன் வேண்டும் என கேட்டானாம்.

அதற்கமைய அமைச்சர்களும் 100 அறிவுள்ள மணமகன் தேடி அலைந்து களைத்துபோன நிலையில் மீண்டும் மன்னனிடம் வந்து 100 அறிவுள்ள மணமகனை தேடிபிடிக்க முடியவில்லை.

ஆனால் 98 அறிவுள்ள மணமகனை தேடி பிடித்துள்ளோம் என கூறினார்கள்.

சரி பரவாயில்லை. 2 அறிவுகள் தானே குறைகிறது. என கூறிய மன்னன் அமைச்சர்கள் காட்டிய அந்த மணமகனை தனது மகளுக்கு மணம் முடித்துகொடுத்தார்.

திருமணம் முடிந்த பின்னர் அமைச்சரை அழைத்த மன்னன் மணமகனுக்கு 98 அறிவு உள்ளது. 2 அறிவுதான் குறைகிறது என கூறியிருந்தீர். அவரிடம் இல்லாத அந்த 2 அறிவும் என்ன? என வினவினாராம்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சொல்புத்தி, சுயபுத்தி ஆகிய இரு அறிவுகளும் மணமகனுக்கு இல்லை என கூறினாராம்.

அப்படித்தான் இங்கே நிலமை உள்ளது. என கூறினார்.

இதனையடுத்து சிறிதுநேரம் அவையில் சிரிப்பொலி மேலிட்டது.

பின்னர் ஒருவாறாக அது அமைதியடைந்தது. குழப்பங்கள் எவையும் அவையில் இடம்பெறவில்லை.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
862 Views
HiruNews
HiruNews
HiruNews
3,983 Views
HiruNews
HiruNews
HiruNews
4,482 Views
HiruNews
HiruNews
HiruNews
8,096 Views
HiruNews
HiruNews
HiruNews
33 Views
HiruNews
HiruNews
HiruNews
35,255 Views
Top