Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Tuesday, 13 March 2018 - 19:50
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு காணாமல் போனோர் அலுவலக தலைவர் கோரிக்கை
1

Shares
169

Views
தங்களது இலக்கை அடைவதற்கு, காணாமல் போனோரின் உறவினர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அறிவித்துள்ளது.

அந்த அலுவலகத்தின் தலைவரால் விடுவிக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்திற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி நியமித்தப் பின்னர், கடந்த மாதம் 28ம் திகதியில் இருந்து அலுவலகம் செயற்பட ஆரம்பித்துள்ளது.

காணாமல் போனவர்களை தேடியறிதல், அவர்களுக்கு என்ன ஆனது என்று கண்டறிதல், காணாமல் போனவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களது உரிமைகள் மற்றும் அபிலாசைகளை பாதுகாத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்களை வழங்கும் வழிகளை அடையாளம் காணுதல் மற்றும் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கு, அதிகாரிகளுக்கான பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய பணிகளை இந்த அலுவலகம் முன்னெடுக்கவுள்ளது.

இந்த அலுவலகமானது, இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக உருவாக்கப்பட வேண்டிய நான்கு பொறிமுறைகளில் ஒன்றாகும்.

இதன் ஊடாக நீண்டகாலமாக வேதனைகளுக்கு உள்ளாகியுள்ள காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதிக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்படுகிறது.

காணாமல் போனோரின் உறவினர்கள் நீண்டகாலமாக தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்னானது என்று அறிந்துக் கொள்ள முடியாமல், வேதனையாலும், விரக்தியாலும், துன்பப்பட்டிருந்த நிலைமைகளுக்கு பதில் வழங்க இந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த அலுவலகத்துக்கான வலுவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை விடுப்பதாக, காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , சுவிட்சர்லாந்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், கிளிநொச்சிக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒரு ஆண்டைக் கடந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்ததக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
732 Views
HiruNews
HiruNews
HiruNews
3,878 Views
HiruNews
HiruNews
HiruNews
4,460 Views
HiruNews
HiruNews
HiruNews
8,031 Views
HiruNews
HiruNews
HiruNews
122 Views
HiruNews
HiruNews
HiruNews
35,094 Views
Top