Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+
Wednesday, 14 March 2018 - 12:48
மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்த மகிந்த ஆதரவு
126

Views
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்துவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருப்பதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 50க்கு50 என்ற கலப்பு முறைமையின் கீழ் நடத்தப்பட்டது.

ஆனால் இது பல அரசியல் கட்சிகளுக்கும் பாதகமான நிலைமையை தோற்றுவித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக, அதன் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் எமது செய்திசேவைக்கு தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் தேர்தல் தொகுதி மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

புதிய மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதற்காக, முன்னாள் நில அளவீட்டு ஆணையாளர் நாயகம் கணகரத்தினம் தவலிங்கம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழு தமது அறிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டு, கடந்த 6ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் படி உருவாக்கப்பட்டுள்ள புதிய மாகாண சபை தொகுதி எல்லைகள், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,968 Views
HiruNews
HiruNews
HiruNews
1,098 Views
HiruNews
HiruNews
HiruNews
6,700 Views
HiruNews
HiruNews
HiruNews
16,896 Views
HiruNews
HiruNews
HiruNews
65 Views
HiruNews
HiruNews
HiruNews
45,244 Views
Top