இலங்கை அணி வீரர்களின் உடையில் புதிய கருவி!!

Friday, 16 March 2018 - 7:12

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%21%21
உலக கிண்ண போட்டியை இலக்காக கொண்டு இலங்கை அணி வீரர்களின் பலவீனங்களை இனங்காண்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட புதிய கணனி மொன்பொருளை அணிந்து நேற்று இலங்கை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த மென்பொருள், ஸ்பெயின் பாசிலோன காற்பந்து அணிகள் பயன்படுத்திய மென்பொருள் என தெரியவந்துள்ளது.

இது கிரிக்கட் விளையாட்டுக்கு பொருத்தமாக மாற்றி இலங்கை அணி வீரர்களின் பலவீனங்களை இனங்காண எதிர்பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மென்பொருளுக்காக 11 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதோடு, வருடாந்த பராமரிப்புக்காக 3 மில்லியனுக்கும் அதிகமான நிதி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GPS உபகரணத்தை அனைத்து வீரர்களின் உடைகளிலும் பொருத்தி, பயிற்சி மற்றும் போட்டிகளின் போதும் அவர்களின் உடற் தகுதி தொடர்பான அனைத்து தகவல்களையும் இதன் ஊடாக பெற்றுகொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதன் உபகரணத்தின் ஊடாக வீரர்கள் சோர்வடையும் விதம், இதய துடிப்பு போன்ற உடற் தகுதி குறித்த அனைத்து தரவுகளை தொழில்நுட்பம் ஊடாக பெற்று கொள்ள முடியும்.

நேற்று இடம்பெற்ற பயிற்சியின் போது வீரர்கள் அந்த உபகரணத்தை பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்ட படங்கள் கீழே..


<img src="http://www.hirunews.lk/Data/news