எச்சரிக்கை..!!

Saturday, 17 March 2018 - 13:04

%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21%21
சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்த காலத்தில் வி.பி.என் எனப்படும் மெய்நிகர் தனியார் வலையப்பின் ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்களின் தகவல்கள் ஏனையோருக்கு செல்லும் வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
 
இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
 
இணைய ஊடுருறுவிகளால் வி.பி.என் ஊடாக குறித்த தகவல்களை இணையத்தளத்தில் பரவ விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

அவ்வாறானதொரு வலையமைப்பின் ஊடாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியவர்களின் பேஸ்புக் கணக்கு உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தகவல்களைத் களவாடும் தகைமை இணைய ஊடுறுவிகளுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களின் கைத்தொலைபேசியில் உள்ள தகவல்களையும் களவாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக, கொடுப்பனவு ஒன்றை வழங்கி, வி.பி.என் வலையமைப்பை பயன்படுத்தியவர்களுக்கு இவ்வாறான பாதிப்பு ஏற்படாது என்று கணினி ஆராயச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ப்ளே ஸ்டோர் ஊடாக வி.பி.என் வலையமைப்பை பயன்படுத்தி பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியவர்களின் தகவல்கள் தொடர்பான இரகசியத் தன்மை குறித்த எச்சரிக்கை நிலைமை உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்த நிலையில், ஊடுறுவிகளால் தமது கணக்களிளுக்கு பிரவேசிப்பார்களா என்ற அச்சம் நிலவுமாயின், அதன் பின்னர் செய்ய வேண்டிய நடடிக்கை குறித்து கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியிலாளர் ரொஸான் சந்தரகுப்த விளக்கமளிக்கையில்,

ஜி மெய்ல் அல்லது யாஹு மின்னஞ்சல் கணக்குகளுக்கு வரும் மின்னஞ்சல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அவர் கூறியுள்ளார்.

தங்களது கடவுச் சொல்லை உறுதிப்படுத்துமாறு வரும் மின்னஞ்சல் இணைப்புக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏனெனில், அவ்வாறான இணைப்புகள் ஊடாக கணக்குகளின் கடவுச் சொல்லை அறிந்து கொள்வதற்காக ஊடுறுவிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.

எனவே, கணக்குகளுக்குள் எவறாவது ஊடுறுவி உள்ளார்களா? என்ற அச்சம் இருக்குமாயின், கணக்கு அமைப்புக்குச் சென்று, கடவுச் சொல்லை மாற்ற வேண்டும்.

அத்துடன், மேலதிக பாதுகாப்பை உறுதிப்படுத்த கடவுச் சொல்லுக்கு அப்பால், கைத்தொலைபேசி இலக்கத்தையும் வழங்கும் முறைமையையும் உள்ளடக்க முடியும்.

இது இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறைமை ஆகும்.

இதன்போது கணக்குகளின் கடவுச் சொல் பயன்படுத்தப்படுகின்றபோது, குறித்த கணக்கின் பயன்பாட்டாளரின் கைத்தொலைபேசிக்கு குறுந் தகவல் ஊடாக குறியீட்டு சொல் ஒன்று அனுப்பப்படும்.

அந்த குறியீட்டு சொல்லை கணக்கில் உள்ளடக்கினால்தான், கணக்கிற்குள் உள் நுழைய முடியும்.

அப்போது, கணக்கு ஒன்றின், கடவுச் சொல்லை ஒருவர் களவாடியிருந்தாலும், கைத்தொலைபேசிக்கு வரும் குறியீட்டுச் சொல் கிடைக்காதததால், கடவுச் சொல்லை களவாடியவருக்கு கணக்கிற்குள் உள்நுழைய முடியாத நிலைமை ஏற்படும்.
 
 எனவே, இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாக கணக்குகள் குறித்து அவதானமாக செயற்பட்டால், தமது கணக்குகளுக்குள் மற்றொருவர் ஊடுறுவுவதை தவிர்க்க முடியும் என கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியிலாளர் ரொஸான் சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.