நேற்றைய போட்டி தொடர்பில் I.C.C யின் அதிரடி

Saturday, 17 March 2018 - 15:55

+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+I.C.C+%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF
ஒழுக்க விதி மீறல் காரணமாக பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன்  மற்றும் நுருல் ஹசன்  ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்தில் 25 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களுக்கு ஒரு தண்ட புள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கை அணியுடன், ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டியின் போது, வீரர்களுக்கு இடையில் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

இதன்போது குறித்த இருவரும் விதிமுறைகளை மீறி செயற்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கட் பேரவை மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

போட்டியில் இடம்பெற்ற பதற்ற நிலைமை குறித்து சர்வதேச கிரிக்கட் கவுன்சிலினால் விசாரணைகள் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதி ஓவரில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன், பங்களாதேஷ் அணி நடுவர்களுக்கு எதிராகவும் தமது எதிர்ப்பை வெளியிட்டதினால் போட்டி சற்று தாமதமாகியது.

இறுதி ஓவரில் 4 பந்துக்களுக்கு 12 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில், வீசப்பட்ட பந்து தவறானது என நடுவரினால் தீர்ப்பு வழங்கப்படாமையினால் பங்களாதேஷ் அணி தலைவர் சக்கிப் அல் ஹசன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வீரர்களை வரவழைக்க முயன்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் பங்களாதேஸ் அணி வீரர்கள் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், இரு பந்துகளுக்கு ஆறு ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில் வெற்றி இலக்கையடைந்தனர்.

இந்நிலையில் ஓய்வறைக்கு சென்ற அவ்வணி வீரர்கள் ஒய்வறையின் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் வீரர்களின் இந்த செயல் கிரிக்கட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளதாக கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கட் கவுன்சில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இத் தண்டனையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்த காணொளி இணைப்பு.... 


rnrn
rnrnrn