சிரியாவில் இன்று 30 பேர் கொலை

Saturday, 17 March 2018 - 19:18

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+30+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
சிரியாவின் கிழக்கு குவோட்டா பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட வான் வழித்தாக்குதலில் 30 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இருந்து வெளியேற காத்திருந்த மக்கள் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டில் தெற்கு சிரியாவில் அரசப் படைகள் முற்றுகையை விலக்கியதை அடுத்து அங்கிருந்து இதுவரையில் பல்லாயிரம் கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளனர்.

அத்துடன், கிழக்கு குவோட்டா பகுதிகளில், சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்.

இந்நிலையிலேயே, கிழக்கு குவோட்டா பகுதியில் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக, பிரித்தானியாவை தளமமாக கொண்டு செயற்பட்டு வரும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை ஒரு கோடி மக்களுக்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.