வடகொரிய தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்

Sunday, 18 March 2018 - 9:59

+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள உத்தேச பேச்சுவார்த்தைகளுக்காக, ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக வடகொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அணுவாயுதக் கலைவு தொடர்பில், வடகொரிய தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு சுவீடன் மத்தியஸ்த்தம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அதேநேரம், இந்த பேச்சுவார்த்தை சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.