விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் சந்தையில் விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் விலைகளை உடனுக்குடன் அறிவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 66-66 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்வதன் மூலம் 23 மரக்கறி வகைகளின் விலைகளை அறிந்துகொள்ள முடியும்.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.