இறுதிப் பந்தில் எதிர்பாராத ஆறு ஓட்டம் - மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் தினேஸ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம்

Monday, 19 March 2018 - 7:13

%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையில் இடம்பெற்ற முக்கோண 20க்கு 20, சுதந்திர கிண்ண கிரிக்கட் தொடரில் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று பங்களாதேஷ் அணியுடன் இந்திய அணி மோதிய நிலையில், இந்த போட்டியில் 4 விக்கட்டுக்களால் அந்த அணி வெற்றி பெற்றது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சூழட்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில், சப்பிர் ரஹ்மான் 77 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில், இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சஹல் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து பதிலளித்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா 56 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணிக்கு இறுதி கட்டத்தில் வெற்றியை பெற்று கொடுத்த தினேஸ் கார்த்திக் தெரிவு செய்யப்பட்டார்.

அவர் ஆட்டமிழக்காது 8 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள், இரண்டு 4 ஓட்டங்கள் அடங்களாக மொத்தம் 29 ஓட்டங்களை பெற்றார்.

தொடரின் சிறப்பாட்டக்காரராக, இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் வொஷிங்டன் சுந்தர் தெரிவு செய்யப்பட்டார்.