பங்களாதேஸ் அணியை சராமாரியாக வார்த்தைகளால் தாக்கிய இந்தியாவின் பிரபல கிரிக்கட் வீரர்

Monday, 19 March 2018 - 12:04

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+
பங்களாதேஸ் அணிக்கு எதிராக சர்வதேச போட்டித்தடை விதிக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட பங்களாதேஸ் அணிக்கு இந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"போட்டியில் அணியின் தலைமை பதவி வகிக்கும் போது தலைவர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அதனை மறக்க வேண்டாம். நானும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முகம் கொடுத்துள்ளேன். இது கிரிக்கட் விளையாட்டில் வருத்ததிற்கு உரிய விடயமாகும். நீங்கள் மீண்டும் இந்த சம்பவத்தை திருப்பி பார்க்க வேண்டும், நீங்கள் வெட்கப்பட வேண்டும்.இந்த சம்பவத்தால் பங்களாதேஸ் அணி பல ரசிகர்களை இழந்துள்ளது.

நடுவர்களின் தீர்ப்பில் தவறு இருந்தாலும் இது போட்டியில் நடக்க கூடிய விடயமே. உங்களுக்கு களத்தில் இருக்கும் வீரர்களை வெளியே அழைக்க முடியாது" என ஹர்பஜன் சிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

.