பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கைது

Tuesday, 20 March 2018 - 18:24

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிகாலா சார்கோசி அந்நாட்டு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லிபியாவின் முன்னாள் அதிபரான முவமர் கடாபியிடம் இருந்து தனது தேர்தல் செயற்பாடுகளுக்கு நிதியுதவி பெற்றுக்கொண்டதாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

2007ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் அந்நாட்டு காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிகாலா சார்கோசியிடம் இதற்கு முன்னரும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் , முன்னாள் ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை நிராகரித்து வரும் நிலையில் , சட்டவிரோதமான எவ்வித செயல்களிலும் தான் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்து வருகிறார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரின் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களிடமும் மற்றும் அவரின் உறவினர்களிடமும் பிரான்ஸ் காவ்றதுறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.