த்ரில் வெற்றி குறித்து தினேஸ் கார்த்திக் பேட்டி - காணொளி உள்ளே

Tuesday, 20 March 2018 - 17:52

%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87
``பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் இறுதி ஓவரில் சிக்ஸர் அடிக்க முடியும் என நம்பினேன்'' என்று இந்திய கிரிக்கட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் கடந்த 18ம் திகதி நடைபெற்றது.

அந்தப் போட்டியில் இறுதியாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 8 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அதில் கடைசி ஓவரின் இறுதிப் பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்சர் அடித்து இந்திய அணி கிண்ணத்தை வெல்ல காரணமாக அமைந்தார்.

தினேஷ் கார்த்திக்கின் இந்தப் துடுப்பாட்டம் உலகளவில் அளவில் அவருக்கு பாராட்டுகளைக் குவித்துவருகிறது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், 'இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையான போட்டி இருக்கும்போது, கிடைக்கும் வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவது அவசியம்.

இந்திய அணியில் விளையாடினாலும் எனக்கு தமிழில் பேசவே பிடிக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம்.

சென்னை அணியில் இடம் கிடைக்காதது எனக்கு வருத்தமளிக்கிறது.

பங்களாதேஷுற்கு எதிரான போட்டி தனிப்பட்ட முறையில் எனது மிகச் சிறந்த இன்னிங்ஸ்.

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்பினேன். அதுபோல் நடந்துவிட்டது' என்று தெரிவித்தார்.