இந்திய கிரிக்கட் மகளிர் அணி தலைவியின் வலியுறுத்தல்

Wednesday, 21 March 2018 - 13:18

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
மகளிர் கிரிக்கட் கழகங்களுக்கு இடையிலான ஐ.பி.எல். தொடர் ஒன்றை நடத்துவதற்கு முன்னர், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையானது, உள்ளுர் கிரிக்கட் போட்டிகளை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் மகளிர் அணியின் தலைவர் மித்தலி ராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது மிகவும் பரந்த அளவில் நடத்தப்படுகின்ற ஐ.பி.எல். தொடரைப் போன்று, மகளிர் கழகங்களுக்கு இடையிலான 20க்கு20 தொடர் ஒன்றை நடத்த முயற்சிக்கப்படுகிறது.

இதற்கு பரீட்சாத்தமான போட்டிகள் சிலவற்றை நடத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்திருந்தது.

எனினும் உள்ளுர் மகளிர் கிரிக்கட் போட்டிகளை பலப்படுத்தால், இவ்வாறான தொடர்கள் வெற்றியளிக்காது என்று மித்தலி ராஜ் தெரிவித்துள்ளார்.