மொட்டை போட்ட பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்

Wednesday, 21 March 2018 - 20:41

%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

மலையாள உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக நடிக்கும் திறமை கொண்டவர் நடிகை லேனா.

இவருக்கு வயது குறைவாக இருந்தாலும் 10 வயது சிறுவர் முதல் பிருத்திவிராஜ் வரை அம்மா வேடத்தில் நடித்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் மருத்துவராக நடித்திருந்தார்

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த இறா என்கிற படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையொட்டி பழனிமுருகன் கோவிலில் தனது முடியை காணிக்கையாக கொடுத்துள்ளார் லேனா.

அவரது இன்ஸ்டாகிராமில் மொட்டை தலையுடன் புகைப்படத்தை போட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் எந்த படத்திற்காக இந்த மொட்டை என்று கேள்வி எழுப்ப, பழனி முருகனை மறந்துவிட்டீர்களா என்ற பதிலை கொடுத்து ரசிகர்களை திகைக்க வைத்தார் லேனா.

அவர் போட்ட இந்த புகைப்படம் வலைதளத்தில் செம வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.