நெல் அறுவடைக்கு தேவையான கோரிக்கை முன்வைக்கப்பட்டால் நடவடிக்கை

Wednesday, 21 March 2018 - 21:11

+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+
யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல் அறுவடைக்கான இயந்திரங்களின் தேவைப்பாடு குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அளுவிஹார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்று சபையில் எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நெல் அறுவடையின்போது பயன்படுத்தப்படுகின்ற இயந்திரங்கள் வெளியில் இருந்து கொண்டுவரப்படுகின்றது.

அவற்றை கமநல சேவைகள் அமைப்புகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க முடியுமா என டகள்ஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அளுவிஹார,

கமநல சேவைகள் மத்திய நிலையங்களுக்கு பெயர்ப் பட்டியல் கிடைக்கப்பெற்றதால், அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப செயற்பட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.