தினேஷ் கார்த்திக்கின் இறுதி சிக்ஸால் நடந்த விபரீதம்..!

Thursday, 22 March 2018 - 8:20

+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..%21
சூரத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர், பங்களாதேஸ் அணியுடான இறுதிபோட்டியில் இந்தியா அணி திரில் வெற்றி பெற்றதால் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி, சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது இறுதி போட்டி, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்ற இப்போட்டியில், கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு கிண்ணத்தினை பெற்றுத் கொடுத்தார்.

இக்கட்டான நிலையில், 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்த தினேஷ் கார்த்திக் இறுதிபோட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரின் இந்த சிறப்பான ஆட்டத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சூரத்தில் உள்ள வால்சாத் என்ற பகுதியைச் சேர்ந்த பிரவீன் பட்டேல்  என்ற பள்ளி ஆசிரியர், கடைசி பந்தில் இந்திய அணி சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற உற்சாக த்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான பட்டேல், தனது குடும்பத்துடன் இறுதிபோட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டேல், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இது பட்டேலின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.