பின்லந்தில் ரகசிய பேச்சுவார்த்தை

Friday, 23 March 2018 - 20:51

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
வட மற்றும் தென் கொரிய நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன், அமெரிக்காவின் பிரதிநிதி ஒருவரும் பின்லந்தில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பின்லாந்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ரகசிய பேச்சுவார்த்தைகள் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரத்திற்கு வெளியேயுள்ள 19 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட பழமையான இல்லத்தில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிய பகை நாடுகளாக செயல்பட்டு வந்த வட மற்றும் தென் கொரிய நாடுகள், தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியினை அடுத்து இணக்க செயல்பாட்டிற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதேபோன்று வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயும் இணக்க சூழல் உருவாக வேண்டும் என்ற முயற்சியில் தென்கொரியா ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இடையேயான நேரடி பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மே மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்னோடியாகவே, கொரிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக் பிரதிநிதிகளுக்கு இடையே பின்லாந்தில் இரண்டு நாட்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.